பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெல்லிக்குப்பம் அருகே அரசுப் பேருந்தில் தீ விபத்து

கடலூரில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து நெல்லிக்குப்பம் அருகே வந்த போது கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

News image
Updated On :24 ஜூலை 2013, 6:19 am

சீனிவாசன்

கடலூரில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து நெல்லிக்குப்பம் அருகே வந்த போது கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கடலூரில் இருந்து சேலத்துக்கு சேலம் கோட்ட அரசுப் பேருந்து 10 மணியளவில் சுமார் 40 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த பேருந்து நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம் அருகே வந்த போது, பேட்டரி ஒயரில் எதிர்பாராத விதமாக தீ ஏற்பட்டு, அது பேனரில் பற்றி கரும்புகையுடன் தீ பற்றி எரிந்தது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினர். அப்போது, கடலூர் குப்பம்குளம் பகுதியைச் சேர்ந்த அமுதா (50) மூச்சடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.  அவர் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

பேருந்தில் தீ பற்றியது குறித்து ஓட்டுநர் ஏழுமலை என்பவர் புகார் செய்ததில், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.