பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டியில் விவசாயி வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியவர் கைது

பண்ருட்டியில், விவசாயியின் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

News image
Updated On :24 ஜூலை 2013, 6:23 am

சீனிவாசன்

பண்ருட்டியில், விவசாயியின் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

பண்ருட்டி வட்டம் சிறுதொந்தமாதேவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கவேல் (50). செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தங்கவேலின் கூரை வீடு மீது பெட்ரோலை ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினார். உடனே அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததும், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். இதில் பாதி வீடு சேதம் அடைந்தது.

பெட்ரோல் ஊற்றி வீட்டை கொளுத்திவிட்டு தப்பியோடிவரை ஊர் பொதுமக்கள் பிடித்து விசாரித்ததில், அவர் அதேப் பகுதி அம்பலவானன் பேட்டைமையச் சேர்ந்த சௌந்தர்ராஜன் (30) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தாடாம்புலியுர் காவல்துறையிடம் சௌந்தர்ராஜன் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.