மதுரை அரசு மருத்துவமனை உறைவிட பெண் மருத்துவர் தற்கொலை முயற்சி

மருத்துவக் கல்வியை 4 ஆண்டுகள் முடித்த நிலையில் ஐந்தாவது ஆண்டு உறைவிட மருத்துவராக பணிபுரியவேண்டும். அவ்வாறு பணிபுரியும் போது அரசு மாத ஊதியமாக உதவித்தொகையும் அளிக்கிறது. உறைவிட மருத்துவர்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள
Updated on
1 min read

மதுரை அரசு மருத்துவமனையில் உறைவிட பெண் மருத்துவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக் கல்வியை 4 ஆண்டுகள் முடித்த நிலையில் ஐந்தாவது ஆண்டு உறைவிட மருத்துவராக பணிபுரியவேண்டும். அவ்வாறு பணிபுரியும் போது அரசு மாத ஊதியமாக உதவித்தொகையும் அளிக்கிறது. உறைவிட மருத்துவர்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து பணிபுரிவது அவசியம்.அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் பிரதீபா (22) உறைவிட மருத்துவராக மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துவருகிறார். இந்தநிலையில் அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

தகவலறிந்ததும் மருத்துவமனை டீன் டாக்டர் என்.மோகன் மற்றும் உறைவிட அதிகாரி டாக்டர் பிரகதீஸ்வரன் ஆகியோர் மாணவியின் உடல் நலம், அவருக்கான சிகிச்சை குறித்து விசாரித்தனர். மேலும், மாணவியின் தற்கொலை முயற்சி குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.மாணவி காதல் பிரச்னையில் தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மேலும், கடந்த சில நாள்களுக்கு முன்பு உறைவிட பெண் மருத்துவர் காதல் திருமணம் செய்த நிலையில், தற்போது காதல் பிரச்னையில் உறைவிட மருத்துவர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com