‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஏலச்சீட்டு நடத்தியவர் ரூ. 5 கோடியுடன் தலைமறைவு

காஞ்சிபுரம் ஆனந்தாபேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர் 20 மாதம் கொண்ட ரூ. 5 லட்சம் சீட்டு, 30 மாதம் கொண்ட ரூ. 9 லட்சம் சீட்டு ஆகிய வகைப்பாட்டில் பல்வேறு பிரிவுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.

News image
Updated On :8 ஜூன் 2013, 12:45 pm

சக்திவேல்

காஞ்சிபுரத்தில் ஏலச்சீட்டு நடத்தியவர் ரூ. 5 கோடியுடன் தலைமறைவானதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை புகார் அளித்தனர்.

காஞ்சிபுரம் ஆனந்தாபேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர் 20 மாதம் கொண்ட ரூ. 5 லட்சம் சீட்டு, 30 மாதம் கொண்ட ரூ. 9 லட்சம் சீட்டு ஆகிய வகைப்பாட்டில் பல்வேறு பிரிவுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் காஞ்சிபுரம், வாலாஜாபாத் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், அரசு ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவர் ரூ. 5 கோடியுடன் தலைமை மறைவானதாக கூறப்படுகிறது. இது குறித்து வாலாஜாபாத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து இன்று மனு அளித்தனர். சீட்டு நடத்திய சுந்தரம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளார். எனவே தலைமறைவான சந்தரத்தை போலீஸார் கண்டுப்பிடித்து கைது செய்து, அவரிடம் இருந்து பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.