குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை

குற்றாலம் பேரருவியில் இன்று காலை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடை
Updated on
1 min read

குற்றாலம் பேரருவியில் இன்று காலை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

நேற்று மாலை வரை இதமான காற்றும் சாரலும் இருந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி முதல் மலைப்பகுதியில் நல்ல மழை பெய்தது. இதன் காரணத்தால் குற்றாலம் பேரருவியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்தது. இதனால் இன்று காலை முதல் பேரருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இன்று சனிக்கிழமை என்பதாலும், இன்னும் பள்ளிகள் திறக்கவில்லை என்பதாலும், சீஸன் தொடங்கிய கடந்த வாரம் முதல் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகம் இருந்தது. இன்று சனிக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர், இந்நிலையில் தடைவிதிக்கப்பட்டது அவர்களுக்கு ஏமாற்றமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com