மதுரை அரசு மருத்துவமனையின் செவிலியர் பயிற்சி பள்ளியில் தீ விபத்து

மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் செவிலியர் பயிற்சி பள்ளியில் இன்று காலை தீ விபத்து நேரிட்டது.
Updated on
1 min read

மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் செவிலியர் பயிற்சி பள்ளியில் இன்று காலை தீ விபத்து நேரிட்டது.

மதுரை அரசு மருத்துவமனையின் வளாகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி செயல்படுகிறது. இன்று காலை திடீரென இந்த பள்ளி கட்டடத்தில் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் தல்லாக்குளம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

மருத்துவமனயை வளாகத்தில் முதல்வர் காப்பீடு திட்ட வார்டு உள்ளிட்ட பல முக்கிய வார்டுகளுக்கு அருகில் இந்த தீ விபத்து நேரிட்டதால் நோயாளிகள் அச்சமடைந்தனர். எனினும், தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com