மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், குழந்தை கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த கேமரா மூலமாக கடத்திச் சென்ற பெண் அடையாளம் காணப்பட்டார்.
மதுரையில் உள்ள ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பிறந்த ஆண் குழந்தை சனிக்கிழமையான இன்று காலை அடையாளம் தெரியாத நபரால் கடத்திச் செல்லப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அரசு மருத்துவமனையில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளைப் போட்டுப் பார்த்தனர்.
அதில், ஒரு பெண்மணி குழந்தையை தூக்கிச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது. அந்த பெண்ணின் அடையாளங்களை பதிவு செய்த கொண்ட காவல்துறையினர், அந்த பெண்ணைப் பற்றி விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.