பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மருந்து கடை ஊழியர் கொலை வழக்கில் மனைவி, கள்ளகாதலன் கைது

சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(30). இவருக்கும் பண்ருட்டி தட்டாஞ்சாவடி கல்பனா(28) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 1 ம் தேதி அன்று முதலாம் ஆண்டு திருமண நாளை

News image
Updated On :16 ஜூன் 2013, 9:49 am

சீனிவாசன்

சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(30). இவருக்கும் பண்ருட்டி தட்டாஞ்சாவடி கல்பனா(28) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 1 ம் தேதி அன்று முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் வகையில் கடலூர் சென்றுவிட்டு திரும்பி கொண்டிருக்கையில் ராசாபாளையம் அருகே சீனிவாசனை மர்ம நபர்கள் கொலை செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக தனிபடை அமைத்து போலீஸார் விசாரனை நடத்தினர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 6 ம் தேதி தினேஷ்பாபு என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.விசாரணையில் சீனிவாசனை மனைவி கல்பனாவும்,தினேஷ்பாபுவும் சேர்ந்தே கொலை செய்திருப்பது தெரியவந்தது.கொலை செய்ததும் தனது நகைகள் அனைத்தையும் தினேஷ்பாபுவிடம் கொடுத்து விட்டு, வழிப்பறிக்காக சிலர் தன் கணவனை கொலை செய்ததாக நாடகம் ஆடியது தெரியவந்தது.இதனையடுத்து கல்பனாவை போலீஸார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.