குண்டாறு அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பகுதியிலுள்ள குண்டாறு அணை நேற்று இரவு முழு கொள்ளளவை எட்டி, 36.2 அடிக்கு நீர் நிரம்பியது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பகுதியிலுள்ள குண்டாறு அணை நேற்று இரவு முழு கொள்ளளவை எட்டி, 36.2 அடிக்கு நீர் நிரம்பியது.

நெல்லை மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதிகள் மற்றும் சுற்றுப் புறங்களில் பெய்து வரும் மழை காரணமாக இந்த முறை குண்டாறு அணை விரைவில் நிரம்பியது. நேற்று இரவு அணை 36.2 அடியை எட்டி, உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த அணையின் மூலம் 1122 ஹெக்டேர் அளவுக்கு நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயப் பணிகள் சூடு பிடித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com