குற்றாலத்தில் மதுபோதையில் குளித்த இளைஞர் பேரருவித் தடாகத்தில் மூழ்கி பலியானார்.
மதுரை வண்டியூர் சௌராஷ்டிர தெருவைச் சேர்ந்த இளைஞர் ஜவஹர். (23, த/பெ. கோபிநாத்). இவர் மருந்து விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றுகிறார்.. இவர் நேற்று நள்ளிரவு 7 நண்பர்களுடன் குற்றாலத்துக்கு வந்துள்ளார். அதிகாலை 3 மணி அளவில் மது போதையில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பேரருவித் தடாகத்தில் விழுந்துள்ளார். நண்பர்கள் முயற்சி செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லையாம். பின்னர் குற்றாலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.