மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: ஒத்துழைப்பின்றி போலீஸ் திணறல்

Updated on
1 min read

மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 15-ம் தேதி ஆண் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் போலீஸார் திணறிவருகி்ன்றனர்.

  மதுரை மாவட்டம் பொம்மன்பட்டியைச் சேர்ந்த தினகரன் மனைவி மீனாட்சியின் ஒரு நாள் ஆண் குழந்தை மர்மப்பெண்ணால் அரசு மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்டது.

   கடத்தல் பெண் உருவம் கண்காணிப்புக் காமிராவில் பதிவான நிலையிலும் முகம் தெளிவற்று உள்ளது. ஆகவே கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையே போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

   மருத்துவமனை ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினாலே உண்மை தெரியவரும். ஆனால், மருத்துவமனை கடைநிலை ஊழியர், செவிலியர் மாணவிகள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

  அப்பாவிப் பெண்ணின் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு ஒத்துழைத்து குழந்தையை மீட்கத் துணைபுரியவேண்டிய மருத்துவமனை ஊழியர்களோ,  விசாரணைக்கு எதிராக போராடுவது சரியா? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். குழந்தை கடத்தப்பட்ட வார்டு பகுதியில் காவல் பணியிலிருந்த தாற்காலிக காவலாளிகளைக் கூட போலீஸார் கடுமையாக விசாரிக்கமுடியாத நிலையே உள்ளது.

   மக்கள் பிரதிநிதிகள் கூட குழந்தையை பறிகொடுத்த பெண்ணுக்கு ஆதரவுக் குரல் எழுப்பாததுடன், விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவோரைக் கண்டிக்காதது ஆச்சரியமளிப்பதாகவும் மூத்த மருத்துவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com