குற்றாலம் பேரருவியில் விழுந்த மிளா: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

குற்றாலம் பேரருவியில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அருவியின் ஓரத்தில் விழும் மிதமான நீரி சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
Updated on
1 min read

குற்றாலம் பேரருவியில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அருவியின் ஓரத்தில் விழும் மிதமான நீரி சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்து வரப்பட்ட காட்டு மிளா ஒன்று, பொங்குமாங்கடல் பகுதியில் தவறி விழுந்துள்ளது. இன்று முற்பகல் அது பொங்குமாங்கடல் பகுதியில் இருந்து கீழே அருவிநீரில் விழுந்து, பேரருவி பாதுகாப்பு வளைவில் மோதி, தடாகத்தில் விழுந்தது.

இந்த மிளா அருவியில் மலைப் பாறையை ஒட்டி விழுந்திருந்தால், குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிக்கும் என்பதால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com