மதுரையில் பால்கடைகாரர் வெட்டிக்கொலை

மதுரையில் புதன்கிழமை இரவு பால்கடைகாரர் மர்மக்கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
Updated on
1 min read

மதுரையில் புதன்கிழமை இரவு பால்கடைகாரர் மர்மக்கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை நேதாஜிசாலை சுண்ணாம்புக்காரத்தெரு பகுதியைச்சேர்ந்தவர் பாலு. இவரது மகன் சுரேஷ் (42). இவர் நேதாஜி சாலையோரத்தில் பால்கடை வைத்து நடத்திவருகிறார்.  இந்தநிலையில் ஆட்டோவில் வந்த மர்மக்கும்பல் சுரேஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

மர்மக்கும்பல் தாக்கியதில் பலத்த காயமடைந்த சுரேஷை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சுரேஷுக்குத் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஆட்டோவில் 5-க்கும் மேற்பட்டோர் வந்து சுரேஷைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திடீர்நகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த கொலை சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலைக்கு தனிப்பட்ட விரோதம் காரணமா? என போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com