பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டியில் பெண் கழுத்தை நெறித்துக் கொலை : நகைக் கொள்ளை

பண்ருட்டியில் 60 வயது பெண் ஒருவர் நகைக்காக கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :27 ஜூன் 2013, 4:58 am

சீனிவாசன்

பண்ருட்டியில் 60 வயது பெண் ஒருவர் நகைக்காக கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம், மேல்குமார மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் நெல்லிக்குப்பம் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவராக இருந்தவர். இவரது மனைவி ஆண்டாள் (60). மேல்குமாரமங்கலத்தில் மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் தென்பெண்ணை ஆற்றின் அருகே இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக நேற்று மாலை ஆண்டாள் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்ததில், கரும்புத் தோட்டத்தில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் ஆண்டாள் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த ஒன்றேகால் சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இது குறித்து அவரது மகன் தென்னரசு பண்ருட்டி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் பண்ருட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.