ரூ.2500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) சதாசிவம்.இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்ட பிரபு என்பவர் கடந்த வாரம் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் கோரி
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) சதாசிவம்.இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்ட பிரபு என்பவர் கடந்த வாரம் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் கோரி அணுகினார். இதில் வி.ஏ.ஓ தடையில்லா சான்று தர தாமதித்து வந்தார். இந்நிலையில் தடையில்லா சான்று தர ரூ. 2,500 லஞ்சம் தருமாறு கேட்டார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசில் மணிகண்ட பிரபு புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு டி.ஸ்.பி. உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பூபதிராஜா, வி.ஏ.ஓ. சதாசிவத்தை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com