கடலூர் மாவட்டத்தில் சுனாமி குடியிருப்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் தரமில்லாமல் உள்ளதாகக் கூறி மனு கொடுக்க வந்தவர், ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார்.
கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி அருகே உள்ள நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (42). இது, சுனாமி தாக்குதலுக்கு உள்ளான கிராமம். இங்கே சுனாமி குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. ஆனால், அவை தரமற்ற முறையில் கட்டிக் கொடுக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் கடந்த 5 வருடங்களாக பலமுறை மனு கொடுத்திருக்கிறார் மணி.
இந்நிலையில், இவர் இது தொடர்பாக ஊரக வளர்ச்சி அதிகாரி ஒருவரை தாக்கியதாகவும் ஒரு புகார் உள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை மனு நீதி நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனுகொடுக்க வத்த மணி, திடீரென்று தீக்குளித்தார். அவரை உடனே காப்பாற்றி, கடலூர் மாவட்ட மருத்துவமனையில் போலீஸார் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மணியின் மனைவி அருகில் உள்ள சிங்கர்குடி பஞ்சாயத்தின் துணைத்தலைவி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

