மதுரையில் ஜனதா கட்சி அலுவலகம் மீது தாக்குதல்

மதுரையில் சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது சுமார் 35 பேர் கொண்ட கும்பல் திடீரென கல் வீசித் தாக்கி ஓடிவிட்டது.
Updated on
1 min read

மதுரையில் சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது சுமார் 35 பேர் கொண்ட கும்பல் திடீரென கல் வீசித் தாக்கி ஓடிவிட்டது.

மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலரும் அந்த கும்பலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அண்மையில் இலங்கை அதிபர் ராஜ்பட்சவைச் சந்தித்துவிட்டுத் திரும்பினார்  ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. இதனால் கோபம் அடைந்த சிலர் ஜனதாக் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினராம். இதில், கட்சி அலுவலகத்தின் பெயர்ப் பலகை சேதம் அடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com