‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தருமபுரி அருகே தனியார் பஸ் மோதி ஆசிரியை பலி; 20 பேர் காயம்

தருமபுரி அருகே பாலக்கோடு சாலையில் உள்ள தடங்கம்பட்டி என்ற இடத்தில் தனியார் பஸ் மோதி ஆசிரியை பலியானார்.

News image
Updated On :9 மார்ச் 2013, 5:08 am

முருகன்

தருமபுரி அருகே பாலக்கோடு சாலையில் உள்ள தடங்கம்பட்டி என்ற இடத்தில் தனியார் பஸ் மோதி ஆசிரியை பலியானார்.

கொல்லன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஜோதி (30) வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் இன்று காலை பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அவர் பள்ளி உள்ள சாலையில் திரும்பும்போது, தருமபுரியில் இருந்து பாலகோடு நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, அவர் மீது மோதியது. இதில், ஆசிரியை ஜோதி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆசிரியை மீது மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் இருந்த புளிய மரத்தில் மோதி நின்றது. இதில், பஸ்ஸில் பயணம் செய்த 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.