இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தினை இந்தியா ஆதரிக்கும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்.
தாம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தினை இந்தியா ஆதரிக்காது; மௌனம் காக்கிறது என்றெல்லாம் ஊடகங்களில் வரும் செய்திகள் முரணானவை என்றார். இலங்கை விவகாரத்தில், சீனா, பாகிஸ்தான் ஆகியவை வெறும் வர்த்தக உறவையே கொண்டுள்ளன, ஆனால் இந்தியா மட்டுமே இலங்கையுடன் நட்புறவு கொண்டுள்ளது. இந்தியாவின் அழுத்தத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நிச்சயம் நன்மையே கிடைக்கும். இலங்கையில் தமிழர் பகுதிகளின் வளர்ச்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.