நாமக்கல்லில் மாணவர்கள் மறியல்: போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு

நாமக்கல்லில் பேருந்து நிலையம் முன் பொறியியல் கல்லூரி மாணவர்கள், மாணவர்கள் மேற்கொண்ட சாலைமறியல் போராட்டங்களால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
Updated on
1 min read

நாமக்கல்லில் பேருந்து நிலையம் முன் பொறியியல் கல்லூரி மாணவர்கள், மாணவர்கள் மேற்கொண்ட சாலைமறியல் போராட்டங்களால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இன்று காலை தொடங்கி இந்த மறியல் போராட்டம் 3 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்தது. இதனிடையே மாணவர்கள் இலங்கை அதிபர் ராஜபட்சவின் உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்களால் நாமக்கல் நகரின் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. பேருந்து நிலையத்துக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com