

தேமுதிக சட்டப்பேரவைக்குழு கொறடாவும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வி.சி.சந்திரகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் ஈரோட்டில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு பூட்டுபோடப்பட்டது.
சட்டப்பேரவையில் அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ.க்களை தாக்கியது தொடர்பாக சந்திரகுமார் உள்பட 6 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஓராண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று தண்டனை 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
தண்டனை காலத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகளை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் எம்.எல்.ஏ. விடுதி, அலுவலகம் உள்ளிட்ட எந்த சலுகையையும் பயன்படுத்த முடியாது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்துககு பூட்டு போடப்பட்டது. இந்த அலுவலகத்தில் எப்பதோதும் எம்.எல்.ஏ. அலுவலக ஊழியர்கள் இருப்பது வழக்கம். இப்போது இவர்கள், தேமுதிக கட்சி அலுவலகத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.