தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா. சண்முகசுந்தர் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் தங்களது தகுதியை வளர்த்துக் கொள்ள தேவையான தொழில் பயிற்சி கட்டணம், போட்டி தேர்வு கட்டணம் போன்றவற்றை செலுத்திட உதவிடும் வகையில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ்-2 மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்கள், தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெற எழுதப்படிக்க தெரிந்து இருந்தால் மட்டும் போதுமானது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவுற்று இருந்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேணடும். பட்டியிலனத்தை சேர்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எனவே, தகுதியுடைய வேலைவாய்¢ப்பு அலுவலக பதிவுதாரர்கள், அலுவலக வேலை நாள்களில் வேலைவாய்ப்பு அலுவலக அசல் பதிவு அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு வங்கிக் கணக்குப்புத்தகம், பாஸ்போர்டு அளவு புகைப்படம் மற்றும் உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டையுடன் நேரில் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.