92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டம்: உப்புநீராக மாறும் அபாயம்

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஊற்றுகள் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் சுமார் 200 கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :2 மே 2013, 3:27 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஊற்றுகள் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் சுமார் 200 கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியத்தில் புளியங்குடி மற்றும் நளம்புத்தூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் 4 ஊற்றுகள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து நீர் எடுக்கப்பட்டு காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், அண்ணாமலைநகர், கிள்ளை வரை குழாய்கள் பதிக்கப்பட்டு, மேற்கண்ட பகுதிகளில் 53 பஞ்சாயத்துகளுக்கும், வழியோர 53 கிராமங்களுக்கும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை பரங்கிப்பேட்டை பகுதிக்கும் விரிவுப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த போதிய மழை இல்லாததாலும், கர்நாடகத்திடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்கப் பெறாததாலும் கொள்ளிடம் ஆற்றில் தற்போது நீரின்றி வறண்டுள்ளது. இதனால் தற்போது கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடல்நீரான உப்புநீர் உள்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஊற்றுநீர் தற்போது உப்புநீராக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் 10 தினங்களுக்கு மேல் குடிநீர் முழுவதும் உப்புநீராக மாறி குடிப்பதற்கு தகுதியற்றுவிடும் எனக்கூறப்படுகிறது. மேலும் உப்புநீர் புகுந்துவிட்டால் விவசாயமும் பாதிக்கப்படும். எனவே கடலூர் மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை மூலம் கொள்ளிடத்தில் குமராட்சி அருகே தடுப்பணை அமைத்து நீரை தேக்கி வைத்து, உப்புநீர் உட்புகுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.