சிதம்பரம் தபால் அலுவலகத்தில் ஸ்டாம்பு மற்றும் கவர் தட்டுப்பாடு!
சிதம்பரம் மற்றும் அண்ணாமலைநகர் தபால் நிலையங்களில் ஸ்டாம்பு மற்றும் போஸ்ட் கவர் ஆகியவை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


சிதம்பரம் மற்றும் அண்ணாமலைநகர் தபால் நிலையங்களில் ஸ்டாம்பு மற்றும் போஸ்ட் கவர் ஆகியவை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் வடக்குரதவீதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் போஸ்ட் கவர் மற்றும் ஸ்டாம்புகள் கிடைக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ரூ.5, ரூ.10, ரூ.25 ஸ்டாம்புகள் தட்டுப்பாடு உள்ளது. மேலும் போஸ்ட் கவரும் தட்டுப்பாடாக உள்ளதால் தபால் நிலையத்தில் ஸ்டாக் இல்லை என தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக ஸ்டாம்பு மற்றும் போஸ்ட் கவர் கிடைக்காததால் தபால்துறையை நம்பியுள்ள நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து தபால் நிலைய அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது சென்னையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நாங்கள் பட்டியல் போட்டு அனுப்பியுள்ளோம். அங்கும் ஸ்டாக் இல்லை என தெரிவித்து அனுப்பவில்லை. குறிப்பாக ரூ.5, 10 ஸ்டாம்புகள், ரூ.5 போஸ்ட் கவர் உள்ளிட்டவை கடந்த ஒருமாதமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நாங்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என தெரிவித்தார். ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் தபால்துறையில் இதுபோன்ற தட்டுப்பாட்டினால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே தபால்துறையினர் இந்த தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...