மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி நர்சிங், பிபிடி மற்றும் பி.பார்ம் ஆகிய சுயநிதி படிப்புக்கான அறிவிப்பில் நுழைவுத்தேர்வு விண்ணப்பம் ரூ.300 எனவும், நுழைவுத்தேர்வு 7-6-2013 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளான பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பம் ரூ.400 எனவும், நுழைவுத்தேர்வு 8-6-2013 ல் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.annamalaiuniversity.ac.in என்ற முகவரியில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம் என்றும், அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து படிப்பு மையங்களிலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம் எண அறிவிக்கப்பட்டுள்ளது.