பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மதி்ப்பெண் கிடைக்காததால் நெல்லை மாவட்டத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் நெல்லை மாவட்டத்தில் தென்காசி மற்றும் புளியங்குடியில் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.மாவட்டத்தில் தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்ததால் மாணவியர் இருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து மாவட்ட ஆட்சியர் சி. சமயமூர்த்தி வேதனை தெரிவித்திருந்தார். மாணவர், மாணவியருக்கு தற்கொலை எண்ணம் ஏற்படாத வகையில் பெற்றோர்கள் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.
இந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மேலும் ஒரு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகேயுள்ள மேட்டு பிராஞ்சேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லையா மகள் செல்வலெட்சுமி (17). இவர் நல்லம்மாள்புரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் பிள்ஸ் 2 படித்தார்.கடந்த 9-ம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வில் செல்வலெட்சுமிக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லையாம். இதனால் விரக்தியில் காணப்பட்ட அவர், நேற்று(சனிக்கிழமை) இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இரவு 11 மணியளவில் அவர் இறந்தார். இது தொடர்பாக கங்கைகொண்டான் போலீஸார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
இந்தியாவின் மின்னல் வேக மனிதர்! தேசிய சாதனையை முறியடித்த குரிந்தர்வீர் சிங்!

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


