ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல்: ஒருவர் கைது

கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தின் முதல்நிலைக் காவலர்கள் கதிரேசன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர், கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு புலன் விசாரணைக்கு உதவியாக சமத்துவபுரம் சென்றுள்ளனர். சமத்துவபுரம்-செம்பட்டையன்கால் ரோட்டில்,

News image
Updated On :13 மே 2013, 8:58 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தின் முதல்நிலைக் காவலர்கள் கதிரேசன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர், கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு புலன் விசாரணைக்கு உதவியாக சமத்துவபுரம் சென்றுள்ளனர். சமத்துவபுரம்-செம்பட்டையன்கால் ரோட்டில், சின்னக்கருப்பசாமி வீடு அருகே போலீஸார் விசாரித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சமத்துவபுரம், ராமசாமி மகன் சுந்தர் (38) என்பவர் போலீஸாரிடம் ஆபாசமாகப் பேசி, அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து முதல்நிலைக் காவலர் கதிரேசன் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.