பெருந்துறை அருகே கார்-மினி லாரி மோதல்: 3 பேர் பலி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காரும் மினிலாரியும் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானார்கள், 2 பேர் காயம் அடைந்தனர்.
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காரும் மினிலாரியும் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானார்கள், 2 பேர் காயம் அடைந்தனர்.

கோவையில் இருந்து பெருந்துறை அருகில் உள்ள துடுப்பதிக்கு மினி லாரி சென்று கொண்டிருந்தது. பெருந்துறையில் இருந்து கோவைக்கு ஒரு கார் சென்றது. அது, பெருந்துறை அருகே கராண்டிபாளையம் என்ற இடத்தில் முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்துவதற்கு முயன்றபோது,  எதிரே வந்த மினி லாரியின் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர், 2 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com