அ.முருகேசன்பிள்ளை 1910-ம் ஆண்டு சகஜானந்தாவை அழைத்துக் கொண்டு சென்று சிதம்பரத்தில் திருநாளைப் போவார் தீயில் மூழ்கிய ஓமக்களுத்தின் கரையில் ஸ்ரீஆறுமுகசுவாமியும், பின்னத்தூர் ஸ்ரீலட்சுமணன் அவர்களும் கட்டியுள்ள சிறிய சந்திரத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து சேவை செய்யுமாறு வலியுறுத்தியதாக சுவாமி சகஜானந்தாவை விவரித்திருக்கிறார். சிதம்பரத்திற்கு வந்த சுவாமி சகஜானந்தா அங்கே ஒரு மடத்தை நிறுவ விரும்பி தொடங்கினார். கல்விச்சாலை ஒன்றையும் ஏற்படுத்த முடிவு எடுத்து 1916-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி நந்தனார் கல்விக்கழகத்தை நிறுவினார். நாட்டுக் கோட்டை செட்டியார்களின் நட்பு கிடைத்ததின் ஆதரவில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, சைவ சமய பிரசாரத்தை மேற்கொண்டார். அந்த பயணம் நந்தனார் மடத்திற்கும், கல்விச்சாலைக்கும் நிதிஉதவி பெறுவதற்கு உதவியாகவும் அமைந்தது.