மதுரையில் விதியை மீறி மது விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 24 பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் தண்டவாளம் அருகே மது விற்றதாக மூர்த்தி (48) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 10 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல, விராட்டிபத்து பகுதியில் அரசு மதுக்கடை அருகே மதுப்பாட்டில் விற்றதாக சந்தானம் (45) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 6 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
மதுரை-திண்டுக்கல் சாலையில் தனியார் பெண்கள் கல்லூரி அருகே மதுப்பாட்டில் விற்றதாக ஸ்ரீதர் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 8 பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.
மதுரையில் கடந்த ஒருவாரத்தில் மது விற்றதாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மது விலக்கு அமல்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.