புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சேலம்-விருத்தாசலம், பெங்களூர்-நாகப்பட்டினம் பாசஞ்சர் ரயில்களில் நீரின்றி பயணிகள் அவதி!

சேலம்-விருத்தாசலம், பெங்களுர்-நாகூர் மார்க்கமாக இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களில் நீரின்றி பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

News image
Updated On :24 மே 2013, 3:41 pm

ஜி.சுந்தரராஜன்

சேலம்-விருத்தாசலம், பெங்களுர்-நாகூர் மார்க்கமாக இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களில் நீரின்றி பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சேலம்- விருத்தாசலம், பெங்களூர்-நாகூர் மார்க்கமாக தினசரி பாசஞ்சர் ரயில்களை இயக்குப்படுகிறது. இந்த ரயில்களில் (trains No: 56835 , 56836 & 56513 , 56514) நீரேற்றப்படுவதில்லை எனக்கூறப்படுகிறது. பெங்களூர்-நாகூர் பாசஞ்சர் ரயிலில் பயணம் செய்யும் நெய்வேலி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகூரைச் சேர்ந்த பயணிகள் நீரின்றி கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் நீரில்லாததால் கழிப்பறை மிகமோசமான நிலையில் உள்ளதாகவும், கழிப்பறையும் சுத்தப்படுத்தாமல் ரயில்களை இயக்கப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மேற்கண்ட ரயில் பெட்டிகளில் ஃபேன்களும் இயங்கவில்லை என குறிப்பிடுகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே ஊழியர்களும், பயணிகளும் பல முறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை எனக்கூறப்படுகிறது. எனவே திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு மேற்கொண்டு மேற்கண்ட ரயில்களில் நீரேற்றி, கழிப்பறையை சுத்தம் செய்தும், ஃபேன்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெய்வேலியைச் சேர்ந்த சமூகசேவகர் எஸ்.சகாதேவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.