காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்

குன்னூர் அருகில் உள்ளது குண்டாட கிராமம், இங்கு  வசித்து வருபவர் அம்மையப்பன் இவரது மகன் முருகன்(24) இன்று காலை தேயிலை எஸ்டேட்டில் கூலி வேலை செய்துக்  கொண்டிருந்தபோது  தேயிலை எஸ்டேட்டில் மறைந்திருந்த காட்டெருமை

குன்னூர் அருகில் உள்ள ஜெகதளா குண்டாட கிராமத்தில்  தோட்ட வேலை செய்துக் கொண்டிருந்த தேயிலை தொழிலாளியை காட்டெருமை தாக்கியதில்  அவர் படுகாயமடைந்தார்  அவரை பொது மக்கள் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

குன்னூர் அருகில் உள்ளது குண்டாட கிராமம், இங்கு  வசித்து வருபவர் அம்மையப்பன் இவரது மகன் முருகன்(24) இன்று காலை தேயிலை எஸ்டேட்டில் கூலி வேலை செய்துக்  கொண்டிருந்தபோது  தேயிலை எஸ்டேட்டில் மறைந்திருந்த காட்டெருமை முருகனை  பலமாக தாக்கியது, இதில் முருகன் சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்தார்,  தண்வடப் பகுதியில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக   இவரை அப்பகுதி மக்கள் குன்னூர்  அரசு லாலி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கே அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்படி அடிக்கடி ஊருக்குள் புகுந்து பொது மக்களை தாக்கி வரும் வனவிலங்குகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு  கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com