பனியன் நிறுவன பெண் தொழிலாளி கடத்தல்: நான்கு பேர் கைது

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்ரீராமலு மகள் விஜயா(19), இவர் அவிநாசி அருகே புதிய திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் தனது ஊருக்குச் சென்று விட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு புதிய திருப்பூர் வருவதற்காக
Published on
Updated on
1 min read

அவிநாசி அருகே பனியன் நிறுவன பெண் தொழிலாளியை கடத்திய நான்கு பேரை அவிநாசி மகளிர் போலீஸார் இன்று கைது செய்தனர்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்ரீராமலு மகள் விஜயா(19), இவர் அவிநாசி அருகே புதிய திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் தனது ஊருக்குச் சென்று விட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு புதிய திருப்பூர் வருவதற்காக அவிநாசி அருகே உள்ள காளம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று உள்ளார். விஜயா பணிபுரியும் நிறுவனத்தில் போன் மூலம் தொடர்பு கொண்டு வாகனம் அனுப்புமாறு கூறி விட்டு காத்திருந்துள்ளார்.அப்போது காரில் வந்த நான்கு பேர் விஜயாவைக் கடத்திச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த விஜயா பணிபுரியும் பனியன் நிறுவனத் தொழிலாளர்கள், காரைப் பின் தொடர்ந்து சென்று, விஜயாவை மீட்டு, காரில் கடத்திய நால்வரையும் அவிநாசி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைந்தனர்.

இது குறித்து அவிநாசி மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டதில், இவர்கள் அனுப்பர்பாளையம் பூலாங்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் சுந்தரம்(எ) கல்யாணசுந்தரம்(30), கார் உரிமையாளர்,  ஆத்துப்பாளையம் குணசேகரன் மகன் செந்தில்குமார்(22), கார் ஓட்டுநர், பெருமாநல்லூர், பரமசிவம்பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் ஜெயக்குமார்(30), திருப்பூர் சிவன் தியேட்டர் வீதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரதீப்(25) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து நான்கு பேர் மீது கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் படி வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com