

மதுரையில் நேற்று நள்ளிரவில் திருநகர், சமயநல்லூர், சோழவந்தான் அருகில் உள்ள தனிச்சியம் ஆகிய பகுதிகளில் குடும்பப் பிரச்னை காரணமாக 3 கொலைகள் நிகழ்ந்துள்ளன. மாமனாரே மருமகளை வெட்டிக் கொன்றது, கள்ளக் காதல் காரணமாக கொலை, தங்கை கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டதால் தங்கை வாழ்க்கை பாதிக்கிறதே என்ற காரணத்தால் தங்கை கணவன் வெட்டிக் கொலை என இதற்கான காரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
சோழவந்தான் அருகே அய்யங்கோட்டையில் சுப்பிரமணி (19) என்ற கல்லூரி மாணவர் சொந்த மைத்துனரால் கொலை செய்யப்பட்டு வீட்டின் உள்ளேயே புதைக்கப்பட்டுள்ளார். அவரைக் கொலை செய்ததாக ஆறுமுகம் என்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரு நாட்களில் மதுரை நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் 6 பேர் குடும்பத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் மதுரை மாடக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கலாசாரப் பின்னணி கொண்ட மதுரை நகரில் அண்மைக் காலமாக குடும்ப அமைப்பில் ஏற்படும் சீரழிவு காரணமாக, அதிக அளவில் கொலைகள் நடைபெறுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய நிலையை மாற்ற, சட்டத்துக்கு அப்பாற்பட்ட முயற்சிகள் தேவை என்கின்றனர் காவல் துறையினர். இதற்கு சமூக ஆர்வலர்கள், கலாசாரத்தை கற்றுக் கொடுக்கும் ஆர்வலர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்கின்றனர் காவல் துறையினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.