மதுரையில் இளைஞர் வெட்டிக்கொலை

மதுரையில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலையில் இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்டார்.
Updated on
1 min read

மதுரையில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலையில் இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்டார்.

   மதுரை திடீர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபேஷ்குமார் (28). இவர் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி தலைவிரிச்சான் சந்து பகுதியில் நண்பர்களுடன் நின்றிருந்துள்ளார். அப்போது செல்லூர் பகுதியைச் சேர்ந்த 6-க்கும் மேற்பட்டோர் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்துள்ளனர். அவர்களைப் பார்த்து ரூபேஷ்குமார் ஓடியுள்ளார். அவரை விரட்டிய கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளது.

  இதில் பலத்த காயமடைந்த ரூபேஷ்குமார் கீழே விழுந்துள்ளார். அவரை வெட்டிய கும்பல் தலையில் கல்லைப் போட்டு தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ரூபேஷ்குமார் உயிரிழந்தார். கொலைக்கும்பல் தப்பியோடிவிட்டது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

   திலகர்திடல் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல் துணை ஆணையர் எஸ்.எச்.ராஜேந்திரா மற்றும் காவல் அதிகாரிகள் வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

   ரூபேஷ்குமாரின் சகோதரர் கடந்த 2006-ல் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும், அதனடிப்படையிலேயே தற்போது ரூபேஷ்குமார் கொலை நடந்திருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மதுரை நகரில் கடந்த 3 நாள்களில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தனிப்பட்ட முன்விரோதத்தால் நடந்த கொலை என போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com