வாடிப்பட்டி அருகே விபத்தில் ரயில்வே அலுவலர் சாவு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்கமுயன்ற ரயில்வே துறை அலுவலர் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தார்.
Updated on
1 min read

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்கமுயன்ற ரயில்வே துறை அலுவலர் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தார்.

    மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் மயிலங்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி (50). இவர் மதுரை ரயில்வே துறை கல்விப்பிரிவு அலுவலராக இருந்தார். வாடிப்பட்டியில் சொந்த வேலையாகச் சென்றவர் புதன்கிழமை இரவு மதுரைக்கு வருவதற்காக வாடிப்பட்டி மின்வாரிய அலுவலகப் பகுதியில் சாலையைக் கடந்துள்ளார்.

   அப்போது அவரது பின்னால் வந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிளில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த புகழேந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலத்தைக் கைப்பற்றிய வாடிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com