பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தபோது, சிறைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் தமிழக அரசு மீதும், முதல்வர் மீதும் அவதூறாகப் பேசியதாக திருச்சி அரசு வழக்குரைஞர் அசோகன் புகார் பதிவு செய்தார். அதன்படி, வழக்கு விசாரணக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆரஜாகக் கூறி ராமதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டிருந்தது. ஆனால், அவர் இன்று ஆஜராகவில்லை. அவர் சார்பாக வழக்குரைஞர் லாரன்ஸ் ஆஜரானார்.
அப்போது அவர், தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ராமதாஸ் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து ஒன்றாக விசாரிக்குமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு வழக்கு நடந்து வருகிறது என்று கூறினார்.
இதை அடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை டிச.2ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் உத்தரவை அடுத்து அடுத்த கட்ட விசாரணை அமையும் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.