சாத்தூர் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்றதாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் பாண்டிமீனா(17). இவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சென்று கூறி வருவதாக சென்றாராம். இதனால் நீண்டநேரம் ஆகியும் மகள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேடியுள்ளனர். அப்போது சிவசங்குபட்டியைச் சேர்ந்த மற்றொரு ராஜேந்திரன்(22) என்பவருடன் கோவையில் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. பின்னர் இது குறித்து ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸார் கோவையில் இருந்த பாண்டிமீனாவையும், அவரை கடத்திச் சென்ற ராஜேந்திரனையும் அழைத்து வந்தனர். பின்னர் சாத்தூர் நடுவர் நீதிமன்றத்தில் பாண்டிமீனாவை ஆஜார்படுத்தி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.