ரியல் எஸ்டேட் நடத்தி ரூ.1.70 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை இதே பகுதியைச் சேர்ந்த முகேஷ்(40), கருப்பையா(38) மற்றும் தனுஷ்கோடி ஆகியோர்
Updated on
1 min read

விருதுநகரில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து ரூ.1.70 லட்சத்தை மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை இதே பகுதியைச் சேர்ந்த முகேஷ்(40), கருப்பையா(38) மற்றும் தனுஷ்கோடி ஆகியோர் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இதில், குறைந்த மாத தவனையில் வீட்டு மனை வழங்குவதாக கூறி அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். இதை உண்மையென நம்பிய என்.ஜி.ஓ காலனி கிழக்கு பகுதியைச் சேர்ந்த ரமாதேவி என்பவர் மாதந்தோறும் ரூ.300 வீதம் 40 மாதங்களுக்குச் செலுத்தியுள்ளார். இவருக்கு குறிப்பிட்ட மாதங்களில் தவணை தொகை முடிந்த நிலையிலும் வீட்டு மனை பத்திர பதிவு செய்து தரப்படவில்லையாம்.

இதேபோல், இந்திராநகர், யானைக்குழாய் தெரு, புல்லலக்கோட்டை, என்.ஜி.ஓ காலனியில் உள்ள முல்லைத் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 142 பேர் கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கட்டிய பணத்தையும் திரும்ப கேட்டதற்கும் தாமதம் செய்து ஏமாற்றி வருகின்றனர். எனவே இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ராமதேவி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com