திருச்சியில் தி.கவினருக்கும், பாரத முன்னேற்றக் கழகத்தினருக்கும் இடையே கைகலப்பு

திருச்சியில் இன்று நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தி.க. தலைவர் வீரமணி வந்துள்ளார்.
Updated on
1 min read

திருச்சியில் இன்று நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தி.க. தலைவர் வீரமணி வந்துள்ளார்.

இதற்கிடையே இந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரத முன்னேற்றக் கழகம் கட்சிக் காரர்கள் சிலர் வீரமணிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாகவும், வீரமணி படத்துக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தப் போவதாகவும் கூறினர்.

இதற்காக திருச்சி பாலக்கரை அருகே பாரத முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 80 முதல் 100 பேர் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திராவிடக் கழக பிரமுகர்களுக்கும் பாரத முன்னேற்றக் கழகத்தினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com