தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் திங்கள்கிழமை பள்ளி மாணவி உடலில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த முருகன் மகள் மகேஷ்நந்தினி. பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சரியாக படிப்பு வரவில்லை என்ற மன வருத்ததில் இருந்த மகேஷ்நந்தினி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனிமையில் இருந்த போது, உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீயிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பயனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
இது குறித்து முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

