மதுரையில் கழுத்தை அறுத்து பட்டாலியன் போலீஸ்காரர் கொலை: தந்தை உள்ளிட்ட 2 பேர் கைது

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது முதல் மனைவியின் மகன் ஆனந்த் வயது 26 இவர் தருமபுரி மாவட்டம் கோச்சம்பள்ளி 15வது பட்டாளியன் பிரிவில் 2001ல் இருந்து பணிபுரிந்து வந்தார். 2010 இல் இருந்து இவர் பணிக்கு செல்லவில்லை
Updated on
1 min read

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது முதல் மனைவியின் மகன் ஆனந்த் வயது 26 இவர் தருமபுரி மாவட்டம் கோச்சம்பள்ளி 15வது பட்டாளியன் பிரிவில் 2001ல் இருந்து பணிபுரிந்து வந்தார். 2010 இல் இருந்து இவர் பணிக்கு செல்லவில்லை

மேலும் ஏற்கனவே இரு மனவியை பிரிந்து வாழும் இவர் ஆவடி 2ஆவது பட்ட்டாலியனில் பணிபுரியும் தமிழ் செல்வி என்ற பெண்ணை 3வது முறையாக 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது .

இந்நிலையில் ஆனந்த் மதுரை மேலபொன்னகரம் பகுதியில் வசித்து வந்தார். இவர் அடிக்கடி பணம் கேட்டு தந்தையிடமும் மனைவியிடமும் தகராறு செய்து வந்ததகாக் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று நள்ளிரவில்  தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

 பின்னர் ஞானசேகரன் தனது ராமர் மற்றும் மணி அழைத்துக்கொண்டு ஆனந்தை ஆரப்பபாளையம் வைகை ஆற்று பகுதிக்கு வரச் சொல்லியுள்ளனர். அங்கு வந்த ஆனந்தை தந்தை உள்ளிட்ட மூவர் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த மூவரும் இன்று அதிகாலையில் கரிமேடு போலீஸில் சரண அடைந்துள்ளனர். அதன்படி மூவரையும் கைது செய்த போலீஸார் ஆனந்தின் சடலத்தை கைபற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com