மதுரையில் தண்ணீர் லாரி மோதி ஒரு பெண் பலி

மதுரையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவரை பார்க்க சென்ற போது ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் பலியானார்.
Updated on
1 min read

மதுரையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவரை பார்க்க சென்ற போது ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் பலியானார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:- மதுரை அருகே உள்ள ஊமச்சிகுளம் ஆலத்தூரை சேர்ந்தவர் முத்துக்குமார் இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவரை பார்க்க அவரது  மனைவி முத்துலட்சுமி (22)  தனது உறவினர் சின்ன தம்பி என்பவரது மோட்டர் சைக்கிளில் தன் ஒருவயது குழந்தையுடன் வந்துள்ளார் புதூர் மார்க்கெட் அருகே வந்த போது எதிரே வந்த தனியார் தண்ணீர் லாரி ஒன்று அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் கீழே விழுந்த முத்துலட்சுமி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சின்ன தம்பியின் வலது கால் உடைந்தது. குழந்தைக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது இதுகுறித்து தள்ளாகுளம் போக்குவரத்து போலீஸர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com