மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் விரைவில் வழங்க நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும்   மாணவ, மாணவிகளுக்கு 4-வது செட் சீருடைகள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும்   மாணவ, மாணவிகளுக்கு 4-வது செட் சீருடைகள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி துறை மூலம் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இதுவரையில் 3 செட்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 4-வது செட் சீருடைகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com