விருதுநகரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் 100 பேர் கைது

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் தலைமையில் தமிழ் அமைப்பினர் ரயில் மறியலில் ஈடுபட
விருதுநகரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் 100 பேர் கைது
Updated on
1 min read

விருதுநகரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த மதிமுக மற்றும்  தமிழ் அமைப்பினர் உள்ளிட்ட 100 பேரை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் தலைமையில் தமிழ் அமைப்பினர் ரயில் மறியலில் ஈடுபட வந்தனர். அவர்களை ரயில் நிலைய நுழைவு வாயிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இந்த மறியலில் ஈடுபட முயற்சி செய்த மதிமுகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சக்திவேல், இளம் தமிழர் இயக்க அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் கண்ணன் உள்ளிட்ட 100 பேரை பஜார் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com