விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் இருப்பு குறைவு உள்ளிட்ட முறைகேடுகள் செய்த விற்பனையாளர்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது குறித்து மண்டல இணைப்பதிவாளர் ஜி.குருமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர், சாத்தூர், நரிக்குடி, வத்திராயிருப்பு மற்றும் ராசபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரேசன் கடைகளில் முறைகேடு செய்வதாக கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் பறக்கும்படை ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிகளில் ஒவ்வொரு கடையிலும் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பிட்ட பகுதிகளில் இருப்பு குறைவு உள்ளிட்ட முறைகேடுகள் செய்த விற்பனையாளர்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல், விருதுநகர் வட்டார மொத்த கூட்டுறவு பண்டகசாலையின் விற்பனையாளர் மகேஸ்வரி, ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி ரேசன் கடையின் விற்பனையாளர் சுந்தராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அதன் தலைவர்களுக்கு இணைப்பதிவாளர் ஜி.குருமூர்த்தி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவி்த்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.