தூர்நாற்றத்தை ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?: பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் நகராட்சியில் உள்ள பல்வேறு இடங்களில் மலைபோல் குப்பைகள் குவியல்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படும்
தூர்நாற்றத்தை ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?: பொதுமக்கள் கோரிக்கை
Updated on
1 min read

விருதுநகர் நகராட்சியில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் வகையில்  குவிந்து கிடக்கும் குப்பை குவியல்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் நகராட்சியில் உள்ள பல்வேறு இடங்களில் மலைபோல் குப்பைகள் குவியல்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படும் நிலையேற்பட்டுள்ளது. மேலும், பழைய பேருந்து நிலையம், வெயிலுகந்தம்மன் கோயில், பாவாலி சாலை, முஸ்லீம் நகராட்சி பள்ளி முன்புறம், புல்லலக்கோட்டை சாலை மற்றும் சிவகாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம் ஏற்படுத்தும் வகையில் குப்பை குவியல்கள் குவிந்து கிடக்கிறது.

குறிப்பாக பாவாலி சாலையில் அதிகமான ஆடு, கோழி இறைச்சிக் கடைகள் உள்ளன. இங்குள்ள கழிவுகள் அனைத்தும் முஸ்லீம் நகராட்சி பள்ளியின் முன்புறம் உள்ள பகுதிகளில் கொட்டப்படுகிறது. இதுபோன்ற குறிப்பிட்ட இடங்களில் நகராட்சி குப்பைத் தொட்டிகளில் குப்பைகள் நிறைந்தாலும் அகற்றுவதில்லை. அதற்கு அருகிலேயே இறைச்சிக் கழிவுகளையும் கொட்டுவதால் மக்கியும், அழுகியும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பொதுமக்கள் யாரும் நடந்து செல்ல முடியாத நிலையுள்ளது.

அதேபோல், பழைய பேருந்து நிலையம் மற்றும் தேசபந்து மைதானம் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் முன்புறம் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இங்கு இப்பகுதியில் இரவு நேரங்களில் சிற்றுண்டி கடைகள் நடத்துகின்றவர்கள் இலைக்கழிவுகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டுவதோடு, சுகாதாரக் கேடுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து பாத்திரக்கடை பாலமுருகன் என்பவர் கூறுகையில், பழைய பஸ் நிலையத்தில் இருந்து குறுக்கு வழியாக பொதுமக்கள் கோயிலுக்கு வருகின்றனர். இதுபோன்ற இடங்களில் பல்வேறு கழிவுகளின் குப்பைகளை குவித்து விடுகின்றனர்.  மேலும், இந்த குப்பைகள் உள்ள பகுதிகளில் பன்றிகளின் நடமாட்டமும் உள்ளன. மழைக்காலங்களில் சேரும், சகதிமாக இருக்கிற நேரத்தில் குப்பைகள் மிதித்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலையிருக்கிறது. அதனால், கோயில் எதிர்புறம் உள்ள பகுதி என்பதால் நாள்தோறும் குப்பைகளை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com