விருதுநகர் அருகே ஆதார் அடையாள அட்டைக்கு கைரேகை புகைப்படம் எடுக்கும் முகாம்

ரோசல்பட்டி ஊராட்சியில் சமுதாயக் கூடத்தில் சனி்க்கிழமை நடந்த முகாமை தலைவர் சேதுராமன் தொடங்கி வைத்தார். இதில், பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் ஆர்வத்தோடு பங்கேற்று
விருதுநகர் அருகே ஆதார் அடையாள அட்டைக்கு கைரேகை புகைப்படம் எடுக்கும் முகாம்
Updated on
1 min read

விருதுநகர் அருகே ரோசல்பட்டியில் ஆதார் அடையாள அட்டைக்கு கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் எடுக்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ரோசல்பட்டி ஊராட்சியில் சமுதாயக் கூடத்தில் சனி்க்கிழமை நடந்த முகாமை தலைவர் சேதுராமன் தொடங்கி வைத்தார். இதில், பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் ஆர்வத்தோடு பங்கேற்று ஒவ்வொருவரும் தங்களின் கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கணிப்பொறி கேமரா மூலம் எடுத்துக் கொண்டனர்.

அனைத்து வகையான அரசு நலத்திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் அட்டை முக்கியமான ஆவணமாகும். அதனால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எடுத்தனர். ஏற்கனவே இந்த முகாம் 6 மாதத்திற்கு முன்பு குறிப்பிட்ட நாள் மட்டுமே நடத்தப்பட்டது. அப்போது படமெடுக்க முடியாத நிலையேற்பட்டது. எனவே இதுவரையில் படமெடு்க்காதவர்கள் பயனடையும் வகையில் மறுபடியும் முகாம் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இம்முகாம் இன்று தொடங்கி தொடர்ந்து 18-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து பயனடைய வேண்டும் என ஊராட்சி தலைவர் சேதுராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com