விருதுநகர் மாவட்ட குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கு  வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை

இப்பணிக்கு ஏதேனும் இளநிலை பட்டப்படிப்புடன், தொழில் நுட்பக் கல்வி இயக்குநரால் வழங்கப்பட்ட ஆபிஸ் ஆட்டோமேஷன் கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.எஸ்.சி கணிப்பொறி
Updated on
1 min read

குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணிக் காலியிடத்திற்கு தகுதியானவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட இருக்கிறார்கள்.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயலர் மற்றும் பொதுமேலாளர் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளன.

தகுதி:

இப்பணிக்கு ஏதேனும் இளநிலை பட்டப்படிப்புடன், தொழில் நுட்பக் கல்வி இயக்குநரால் வழங்கப்பட்ட ஆபிஸ் ஆட்டோமேஷன் கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.எஸ்.சி கணிப்பொறி அறிவியல், பி.சி.ஏ பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

கடந்த 1.7.2013 நாளது தேதியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோருக்கு 18 வயது முதல் 35 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோருக்கு 18 வயது முதல் 32 வயது வரையிலும், பொது பிரிவினருக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை கிடையாது.

உத்தேச பதிவு மூப்பு(முன்னுரிமையற்றவர்கள்):

ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியினருக்கு-23.9.2003 வரையும், பழங்குயின வகுப்பினருக்கு-25.11.2005 வரையும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்-8.10.2002 வரையும், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்)-31.7.2003 வரையும், பகிரங்க போட்டியாளர் 18.7.2002 வரையிலும் பதிவு செய்திருக்க வேண்டும்.

முன்னுரிமை உடையவர்கள்:

ஆதரவற்ற விதவைகள்(அனைத்து பிரிவினர்) நடப்பு தேதி வரையிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பெண்கள்(கலப்பு திருமணம் புரிந்தவர்கள்)-30.5.2006 வரையிலும், பிற்படுத்தப்பட்டோர் பொது கலப்பு திருமணம் பிரிந்தவர்கள்-26.6.2006 வரையிலும், பொதுப்பிரிவினர் முன்னுரிமையுடையவர்கள்(கலப்பு திருமணம் புரிந்தவர்கள்)-11.8.2005 வரையிலும், மாற்றுத்திறனாளிகள் பொதுப்பிரிவினர்-15.12.1997 வரையிலும் பதிவு செய்திருக்க வேண்டும்.

எனவே மேற்கண்ட பதிவு மூப்பு, வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதியுடையவர்கள் தாங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரம் குறித்து வருகிற 21-ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து நேரில் சரிபார்த்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் வருகின்றவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேற்குறிப்பிட்ட பணிக்காலியிடத்திற்கான மாநில அளவிலான பதிவு மூப்பு பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com