விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 21-ம் தேதி விரைவு பட்டா மாறுதல் முகாம்

விருதுநகர் வட்டார கிராம மக்கள் பயன் பெறும் வகையில் விரைவு பட்டா மாறுதல் குறிப்பிட்ட நாளில் நடைபெற இருக்கிறது. இம்முகாமில் பொதுமக்கள் பட்டா மாறுதல் கோரிக்கை மனுவோடு,
Updated on
1 min read

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 21-ம் தேதி விரைவு பட்டா மாறுதல் முகாம் ஆட்சியர் தலைமையில் நடைபெற இருப்பதாக வட்டாட்சியர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் வட்டார கிராம மக்கள் பயன் பெறும் வகையில் விரைவு பட்டா மாறுதல் குறிப்பிட்ட நாளில் நடைபெற இருக்கிறது. இம்முகாமில் பொதுமக்கள் பட்டா மாறுதல் கோரிக்கை மனுவோடு, ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பட்டாதாரரிடம் கிரையம் பெற்ற பத்திர நகல், 1.1.1987 வரையிலான வில்லங்க சான்று, கணினி பட்டா, பட்டாதாரர் காலமாகியிருந்தால் இறப்புச் சான்று மற்றும் வாரிசு சான்று ஆகியவைகளை மனுவுடன் வழங்க வேண்டும்.

எனவே இந்த முகாமில் விருதுநகர் வட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், நில அளவர்கள் ஆகியோர் கிராம கணக்குகளுடன் தயார் நிலையி்ல் இருப்பார்கள். அதேபோல், முழுப்புலம் பட்டா மாறுதல் கோரி அளிக்கப்படும் மனுக்களுக்கு 15 நாள்களுக்குள்ளும், உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் கோரி அளிக்கப்படும் மனுக்களுக்கு 30 நாள்களுக்குள்ளும் பட்டா மாறுதல் உத்தரவு வழங்குவதற்கு ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என வட்டாட்சியர் மங்களநாதன் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com